பதிவு செய்த நாள்
05மார்2015
08:18
தேனி : குற்றங்களை தடுக்க ""வாட்ஸ் அப், எஸ்.எம்.எஸ்.,'' வசதியுடன் "ஹலோ போலீஸ் தேனி' டூவீலர் ரோந்து நேற்று தொடங்கியது.
திண்டுக்கல் டி.ஐ.ஜி. அறிவு செல்வம் துவக்கி வைத்தார். மாவட்ட எஸ்.பி., ஜெ.மகேஷ்,""ஒரு டூ வீலரில் இருவர் வீதம் 29 டூவீலரில் 58 போலீசார் 24 மணி நேரம் ரோந்து பணியில் இருப்பர். இதில் சைரன், பைபர் லத்தி,"ரிவாலி லைட்', போலீசாருக்கு மைக், "ஆன்ட்ராய்டு மொபைல் போன்' வழங்கப்பட்டுள்ளது. எந்த பகுதியில் குற்றங்கள் நடந்தாலும், எஸ்.பி.,யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள 88709 85100 மொபைல் எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அத் தகவல் டூவீலர் ரோந்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, உடனடியாக குற்றங்கள் தடுக்கப்படும். தகவல் தெரிவிப்பவர்கள் பெயர்களை தெரிவிக்க தேவையில்லை. எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப், hellopolicetheni@gmail.com என்ற இ மெயில் மூலமாகவும் தெரிவிக்கலாம்'' என்றார்.
உங்களது கருத்துக்கள் வரவேற்கபடுகிறது
No comments:
Post a Comment