தேனி மாவட்டத்தில் ‘ஹலோ போலீஸ்’ என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் ரோந்து படை டி.ஐ.ஜி. அறிவுச்செல்வம் தொடங்கி வைத்தார்
:
வியாழன் , மார்ச் 05,2015, 5:00 AM IST
பதிவு செய்த நாள்:
வியாழன் , மார்ச் 05,2015, 1:27 AM IST
தேனி,
தேனி மாவட்டத்தில் ‘ஹலோ போலீஸ்’ என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் ரோந்து படையை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அறிவுச்செல்வம் தொடங்கி வைத்தார்.
ஹலோ போலீஸ்தேனி மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து நவீன முறையில் புகார் மற்றும் கோரிக்கைகளை பெறவும், குற்றங்களை தடுக்கவும் மாவட்டம் முழுவதும் போலீஸ் துறை சார்பில் ‘ஹலோ போலீஸ் தேனி’ எனப்படும் மோட்டார் சைக்கிள் ரோந்துப்படை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தேனி மாவட்டத்தில் மொத்தம் 31 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் குரங்கணி, ஹைவேவிஸ், வைகை அணை ஆகிய போலீஸ் நிலையங்களை தவிர மற்ற அனைத்து போலீஸ் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் இந்த ரோந்து படைக்கு நவீன வசதிகள் அடங்கிய மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டு உள்ளன.
தேனி நகர் மாவட்டத்தின் தலைநகராக உள்ளதால் தேனிக்கு மட்டும் 2 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டு உள்ளன. மற்ற போலீஸ் நிலையங்களுக்கு தலா 1 மோட்டார் சைக்கிள் வீதம் என தேனி மாவட்டத்திற்கு மொத்தம் 29 மோட்டார் சைக்கிள்களை கொண்டு இந்த ரோந்து படை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்தொடக்க நிகழ்ச்சி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் முன்னிலையில், திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அறிவுச்செல்வம் கலந்து கொண்டு இந்த மோட்டார் சைக்கிள் ரோந்து படையின் பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து மோட்டார் சைக்கிள்களில் போலீசார் மதுரை சாலை வழியாக தேனி நகருக்குள் வந்து, நேரு சிலை, பெரியகுளம் ரோடு, அல்லிநகரம், அன்னஞ்சி விலக்கு, புறவழிச்சாலை வழியாக மீண்டும் மாவட்ட போலீஸ் நிலையம் வரை ஊர்வலமாக வந்தனர்.
இந்த மோட்டார் சைக்கிள் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒலிபெருக்கி, அலாரம், வாக்கி டாக்கி, லத்தி ஆகியவை இணைக்கப்பட்டு உள்ளன. வாகனம் ஓட்டிக் கொண்டே வாக்கி டாக்கியில் பேசும் வகையில், வாக்கி டாக்கியுடன் இணைக்கப்பட்ட பிரத்யோகமான மைக், மோட்டார் சைக்கிளை ஓட்டுபவரின் தோள்பட்டையில் பொருத்தும் வகையில் கொடுக்கப்பட்டு உள்ளது. மோட்டார் சைக்கிளில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.
வாட்ஸ்–அப் தகவல்இந்த ரோந்து படையின் செயல்பாடு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் கூறியதாவது:–
இந்த மோட்டார் சைக்கிள் ரோந்து படையை கண்காணித்து வழி நடத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ‘ஹலோ போலீஸ்’ கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. சமூக விரோத செயல்கள் மற்றும் சமூக விரோதிகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தலாம். இந்த கட்டுப்பாட்டு அறையில் நவீன வசதிகள் கொண்ட செல்போன் உள்ளது. இதற்கு ' 88709–85100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் இந்த எண்ணில் வாட்ஸ்–அப் என்ற தகவல் பரிமாற்ற சேவையும் இணைக்கப்பட்டு உள்ளது. எனவே சமூக விரேத செயல்கள், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக புகைப்படம் எடுத்தும், எஸ்.எம்.எஸ். ஆகவும் தகவல்களை அனுப்பலாம்.
அது மட்டும் இன்றி hellopoicetheni@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் பொதுமக்கள் தகவல்களை கொடுக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் தங்களைப் பற்றிய விவரம் தெரிவிக்க தேவையில்லை. பொதுமக்களின் குரலுக்கு உடனடியாக செவி சாய்த்து துரிதமாக நடவடிக்கை எடுக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த ரோந்து படையில் இருக்கும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதற்காக உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தக்க நடவடிக்கை மேற்கொள்வதற்காக இந்த ரோந்து படையில் ஈடுபடும் போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டு சேது, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீமைராஜ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment