Wednesday, March 11, 2015


THENI - DISTRICT POLICE OFFICE

OFFICER NAMEPHONE NUMBERS
Tr.V.BaskaranOffice : 04546-253664
Cell No : 9444396596
Email : sp.theni@yahoo.com

THENI
SUB-DIVISIONS AND UNIT PHONE NUMBERS
SUB-DIVISIONOFFICER NAMEPHONE NUMBERS
ANDIPATTITr.A. Kulam -949810560504546-242335
BODINAYAKANURTr.R.Prabakaran -830000290004546-283899
PERIYAKULAMTr.Vinoji04546-231250
THENITR. Sethu -830002090804546-252873
UTHAMAPALAYAMTR. P.Annamalai - 949817010004554-265219

UNIT NAMEOFFICER NAMEPHONE NUMBERS
ADSP CRIMETr.K.PalaniKumarOff. 04546-253632 /9498196555
ADSP PEWTmt.Padmavathi-Off : 04546-253306/9498187550
DSP DCBTr.RajendranOff : 04546-231250/9498147244
DSP DCRBVacant04546-253632
DSP Land grabbingTr.B.ManiMaran04546-252664/9498194333
DSP SJ & HRTr. Kannan04546-253624/9498187575
THENI - POLICE STATIONS
Police StationInspector NamePhone Number(s)
ALLINAGARAMTr.Sivakumar  8056697999
Tr.Muthumani  9498187397
04546-254440
AUNDIPATTITr.Jeyachandran 949818570604546-242331
AWPS - ANDIPATTITmt.Nirmala devi - 949818750904546-244431
AWPS - BODINAYAKKANURTmt.Geetha - 949818752604546-285700
AWPS - THENITmt.Ramalakshmi - 949818232504546-254090
AWPS - UTHAMAPALAYAMTmt.Ayyammal Jothi - 948789755504554-268230
BODINAYAKKANUR TALUKTr.Venkadachalapathi - 949818750104546-280292
BODINAYAKKANUR TOWNTr.P. Sekar - 949818602104546-280291
CHINNAMANURTr.Sivakumar - 949818626604554-247341
CUMBUM NORTHTr.Ulaganathan - 949818615104554-271291
CUMBUM SOUTHTr.Karnan - 949812643904554-271422
DCB INSPECTORTr.Jasmin Mumthaj - 830003667894454 55415
DCRB INSPECTORVACCANT
DEVADANAPATTITr.Muthukumar -949818626904546-235225
GANDAMANURTr.Jeyabalan SI - 949818691504546-238240
GANDAMANUR VILAKKUTr.Sulthan Basha SI - 949818726504546-242332
GUDALUR NORTHTr. Jhon Benjamin - 949813191404554-231213
GUDALUR SOUTHTmt.Lavanya SI  - 949818753904554-231203
HIGHWAYSTr. Deivendran - 949818772304554-232230
JAYAMANGALAMTr.Venkatesh Prabu SI - 949818739804546-237239
KADAMALAIKUNDUTr.Sakthivel - 759819542204554-227221
KOMBAITr.Ramalingam SI - 949818828704554-252225
KUMULITr.Ashok SI - 949818760404554-235254
KURANGANITr.Albonse Raja SI - 949818694504546-280970
MAYILADUMPARAITr.Murugan SI - 949818694504554-227253
ODAIPATTITr.Rajalingam SI - 949818771504546-247256
PALANICHETTYPATTITr.Manimaran - 949818737304546-264810
PERIYAKULAMTr.Vinoji - 949818626404546-231291
RAJATHANITr.Elangovan - 830002074904546-249233
RAYAPPANPATTITr.Uthayakumar SI - 949818692704554-253230
SB INSPECTORTr.Murugan, 949810368304546-253101
SJ & HR INSPECTOR-97889 43262
THENITr.Kumaresn - 949818828004546-252391
THENKARAITr.Ramakrishnan - 8300043789
Tmt.Amutha - 9498179500
04546-231449
THEVARAMTr.Immanuvel Rajkumar - 949818562404554-254230
UTHAMAPALAYAMTr.Senthilkumar - 949818600204554-265230
VARASANADUTr.Ramachandran SI - 949816706604554-228229
VEERAPANDITr.Rajsekar SI - 830000042704546-246244

Wednesday, March 4, 2015

தேனி மாவட்டத்தில் ‘ஹலோ போலீஸ்

தேனி மாவட்டத்தில் ‘ஹலோ போலீஸ்’ என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் ரோந்து படை டி.ஐ.ஜி. அறிவுச்செல்வம் தொடங்கி வைத்தார்

:
வியாழன் , மார்ச் 05,2015, 5:00 AM IST
பதிவு செய்த நாள்:
வியாழன் , மார்ச் 05,2015, 1:27 AM IST
தேனி,
தேனி மாவட்டத்தில் ‘ஹலோ போலீஸ்’ என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் ரோந்து படையை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அறிவுச்செல்வம் தொடங்கி வைத்தார்.
ஹலோ போலீஸ்தேனி மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து நவீன முறையில் புகார் மற்றும் கோரிக்கைகளை பெறவும், குற்றங்களை தடுக்கவும் மாவட்டம் முழுவதும் போலீஸ் துறை சார்பில் ‘ஹலோ போலீஸ் தேனி’ எனப்படும் மோட்டார் சைக்கிள் ரோந்துப்படை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தேனி மாவட்டத்தில் மொத்தம் 31 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் குரங்கணி, ஹைவேவிஸ், வைகை அணை ஆகிய போலீஸ் நிலையங்களை தவிர மற்ற அனைத்து போலீஸ் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் இந்த ரோந்து படைக்கு நவீன வசதிகள் அடங்கிய மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டு உள்ளன.
தேனி நகர் மாவட்டத்தின் தலைநகராக உள்ளதால் தேனிக்கு மட்டும் 2 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டு உள்ளன. மற்ற போலீஸ் நிலையங்களுக்கு தலா 1 மோட்டார் சைக்கிள் வீதம் என தேனி மாவட்டத்திற்கு மொத்தம் 29 மோட்டார் சைக்கிள்களை கொண்டு இந்த ரோந்து படை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்தொடக்க நிகழ்ச்சி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் முன்னிலையில், திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அறிவுச்செல்வம் கலந்து கொண்டு இந்த மோட்டார் சைக்கிள் ரோந்து படையின் பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து மோட்டார் சைக்கிள்களில் போலீசார் மதுரை சாலை வழியாக தேனி நகருக்குள் வந்து, நேரு சிலை, பெரியகுளம் ரோடு, அல்லிநகரம், அன்னஞ்சி விலக்கு, புறவழிச்சாலை வழியாக மீண்டும் மாவட்ட போலீஸ் நிலையம் வரை ஊர்வலமாக வந்தனர்.
இந்த மோட்டார் சைக்கிள் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒலிபெருக்கி, அலாரம், வாக்கி டாக்கி, லத்தி ஆகியவை இணைக்கப்பட்டு உள்ளன. வாகனம் ஓட்டிக் கொண்டே வாக்கி டாக்கியில் பேசும் வகையில், வாக்கி டாக்கியுடன் இணைக்கப்பட்ட பிரத்யோகமான மைக், மோட்டார் சைக்கிளை ஓட்டுபவரின் தோள்பட்டையில் பொருத்தும் வகையில் கொடுக்கப்பட்டு உள்ளது. மோட்டார் சைக்கிளில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.
வாட்ஸ்–அப் தகவல்இந்த ரோந்து படையின் செயல்பாடு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் கூறியதாவது:–
இந்த மோட்டார் சைக்கிள் ரோந்து படையை கண்காணித்து வழி நடத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ‘ஹலோ போலீஸ்’ கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. சமூக விரோத செயல்கள் மற்றும் சமூக விரோதிகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தலாம். இந்த கட்டுப்பாட்டு அறையில் நவீன வசதிகள் கொண்ட செல்போன் உள்ளது. இதற்கு '     88709–85100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் இந்த எண்ணில் வாட்ஸ்–அப் என்ற தகவல் பரிமாற்ற சேவையும் இணைக்கப்பட்டு உள்ளது. எனவே சமூக விரேத செயல்கள், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக புகைப்படம் எடுத்தும், எஸ்.எம்.எஸ். ஆகவும் தகவல்களை அனுப்பலாம்.
அது மட்டும் இன்றி hellopoicetheni@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் பொதுமக்கள் தகவல்களை கொடுக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் தங்களைப் பற்றிய விவரம் தெரிவிக்க தேவையில்லை. பொதுமக்களின் குரலுக்கு உடனடியாக செவி சாய்த்து துரிதமாக நடவடிக்கை எடுக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த ரோந்து படையில் இருக்கும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதற்காக உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தக்க நடவடிக்கை மேற்கொள்வதற்காக இந்த ரோந்து படையில் ஈடுபடும் போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டு சேது, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீமைராஜ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

தினமலர் நாளிதழ் செய்தி


பதிவு செய்த நாள்

05மார்
2015 
08:18
தேனி : குற்றங்களை தடுக்க ""வாட்ஸ் அப், எஸ்.எம்.எஸ்.,'' வசதியுடன் "ஹலோ போலீஸ் தேனி' டூவீலர் ரோந்து நேற்று தொடங்கியது.
திண்டுக்கல் டி.ஐ.ஜி. அறிவு செல்வம் துவக்கி வைத்தார். மாவட்ட எஸ்.பி., ஜெ.மகேஷ்,""ஒரு டூ வீலரில் இருவர் வீதம் 29 டூவீலரில் 58 போலீசார் 24 மணி நேரம் ரோந்து பணியில் இருப்பர். இதில் சைரன், பைபர் லத்தி,"ரிவாலி லைட்', போலீசாருக்கு மைக், "ஆன்ட்ராய்டு மொபைல் போன்' வழங்கப்பட்டுள்ளது. எந்த பகுதியில் குற்றங்கள் நடந்தாலும், எஸ்.பி.,யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள 88709 85100 மொபைல் எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அத் தகவல் டூவீலர் ரோந்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, உடனடியாக குற்றங்கள் தடுக்கப்படும். தகவல் தெரிவிப்பவர்கள் பெயர்களை தெரிவிக்க தேவையில்லை. எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப், hellopolicetheni@gmail.com என்ற இ மெயில் மூலமாகவும் தெரிவிக்கலாம்'' என்றார்.
உங்களது கருத்துக்கள் வரவேற்கபடுகிறது 


ஹலோ போலீஸ் தேனி

காவல் துறையை  நவீனபடுத்தும் பொருட்டு  தேனி மாவட்டத்தில்  குற்றங்களை  தடுக்க  மாவட்டம் முழுவதும் புதிதாக "ஹலோ  போலீஸ்  தேனி" எனப்படும் 29 இருசக்கர வாகன ரோந்து இன்று (04.03.2015) முதல்  அறிமுகப்படுத்தபடுகிறது. இந்த  புதிய இருசக்கர வாகன ரோந்து திட்டத்தினை திண்டுக்கல் சரக காவல் துணை தலைவர் திரு.அறிவுச்செல்வம் IPS அவர்கள் துவக்கி வைத்தார். இதற்கென மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஹலோ  போலீஸ்  கட்டுபாட்டு அறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும். அதன் கீழ் அனைத்து இரு சக்கர வாகன ரோந்துகளும் செயல்படும். பொதுமக்கள் ஹலோ  போலீஸ்  தேனி கட்டுபாட்டு அறைக்கு சட்ட விரோத செயல்கள் மற்றும் சமூக விரோதிகள் பற்றிய தகவல்களை 8870985100 என்ற எண்ணிற்கு sms (குறுந்தகவல்) whats app. (mail id) hellopolicetheni@gmail.com மூலமாக தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் தங்களை பற்றிய விபரம் தெரிவிக்க தேவையில்லை.மேலும் பொதுமக்களின் குரலுக்கு உடனடியாக செவிசாய்த்து துரிதமாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ஹலோ  போலீஸ்  தேனி கட்டுப்பட்டு அறைக்கு தகவல் கிடைத்தவுடன் அப் பகுதியில் ரோந்து பணியில்இருக்கும் இரு சக்கர வாகன காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சம்பவ இடம் சென்று தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைது இரு சக்கர வாகன ரோந்து காவலர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என தேனி  மாவட்டா காவல் கண்காணிப்பாளர் திரு.ஜே.மகேஷ் IPS அவர்கள் அறிவித்துள்ளார்கள்.