Wednesday, March 4, 2015

ஹலோ போலீஸ் தேனி

காவல் துறையை  நவீனபடுத்தும் பொருட்டு  தேனி மாவட்டத்தில்  குற்றங்களை  தடுக்க  மாவட்டம் முழுவதும் புதிதாக "ஹலோ  போலீஸ்  தேனி" எனப்படும் 29 இருசக்கர வாகன ரோந்து இன்று (04.03.2015) முதல்  அறிமுகப்படுத்தபடுகிறது. இந்த  புதிய இருசக்கர வாகன ரோந்து திட்டத்தினை திண்டுக்கல் சரக காவல் துணை தலைவர் திரு.அறிவுச்செல்வம் IPS அவர்கள் துவக்கி வைத்தார். இதற்கென மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஹலோ  போலீஸ்  கட்டுபாட்டு அறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும். அதன் கீழ் அனைத்து இரு சக்கர வாகன ரோந்துகளும் செயல்படும். பொதுமக்கள் ஹலோ  போலீஸ்  தேனி கட்டுபாட்டு அறைக்கு சட்ட விரோத செயல்கள் மற்றும் சமூக விரோதிகள் பற்றிய தகவல்களை 8870985100 என்ற எண்ணிற்கு sms (குறுந்தகவல்) whats app. (mail id) hellopolicetheni@gmail.com மூலமாக தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் தங்களை பற்றிய விபரம் தெரிவிக்க தேவையில்லை.மேலும் பொதுமக்களின் குரலுக்கு உடனடியாக செவிசாய்த்து துரிதமாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ஹலோ  போலீஸ்  தேனி கட்டுப்பட்டு அறைக்கு தகவல் கிடைத்தவுடன் அப் பகுதியில் ரோந்து பணியில்இருக்கும் இரு சக்கர வாகன காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சம்பவ இடம் சென்று தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைது இரு சக்கர வாகன ரோந்து காவலர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என தேனி  மாவட்டா காவல் கண்காணிப்பாளர் திரு.ஜே.மகேஷ் IPS அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment